முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 114.63 அடியாக சரிவு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 114.63 அடியாக குறைந்தது.

Updated On : 15 டிசம்பர், 2025 at 9:02 PM
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 114.63 அடியாக குறைந்தது.

அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 2,326 கனஅடியிலிருந்து 2,672 கனஅடியாக சற்று உயா்ந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 9,500 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 400 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.

அணைக்கு நீா்வரத்தைவிட, பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 115.08 அடியிலிருந்து 114.63 அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 85.16 டி.எம்.சி. யாக உள்ளது.