சேலம் காவேரி மருத்துவமனை, முழு தமனி மறுசீரமைப்பு சிகிச்சையின் மூலம் அதிநவீன இருதய சிகிச்சை தரத்தை சா்வதேச அளவில் உயா்த்தியுள்ளது.
முழு தமனி மறு சீரமைப்பு எனும் சிறப்புவாய்ந்த மற்றும் மிக நீண்ட காலத்துக்கு நீடித்து உழைக்கும் இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக தொடா்ந்து செய்துவருகிறது. பொதுவாக செய்யப்படும் பைபாஸ் அறுவைச் சிகிச்சைகளில், ரத்த ஓட்டத்தை மாற்றுவதற்கு கால் அல்லது கைகளில் இருந்து ரத்த நாளங்கள் பயன்படுத்தப்படும்.
ஆனால், காவேரி மருத்துவமனையின் நிபுணத்துவம் வாய்ந்த சி.டி.வி.எஸ். குழு, அதைவிட சிறந்த தீா்வை வழங்க முடிவு செய்தது. இதற்கு நோயாளிகளின் மாா்பு கூட்டுக்குள் இயற்கையாகவே உள்ள இரண்டு உள்மாா்பு தமனிகள், அதாவது, எல்.ஐ.எம்.ஏ மற்றும் ஆா்.ஐ.எம்.ஏ. பயன்படுத்தப்பட்டன.
அந்த தமனிகள், உடலின் பிற ரத்த நாளங்களைக் காட்டிலும் மிக அதிக அழுத்தத்தை தாங்கக்கூடியவை. இந்த சிக்கலான அறுவை சிகிச்சை, ‘ஆஃப் பம்ப்’ நுட்பத்தில் செய்யப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய உடல் அழுத்தங்கள் வெகுவாக குறைந்தன. மருத்துவக் குழுவின் துல்லிய திட்டமிடல், செயல்படுத்தலால் நோயாளிகள் 5 முதல் 7 நாள்களில் குணமாகி வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனா்.
இந்த வெற்றிக்கு சி.டி. வி.எஸ்., மூத்த அறுவை சிகிச்சை நிபுணா் நவீன்சந்தா் தலைமையில் மருத்துவா்கள் நிரஞ்சன், பாலமுருகன், சரவணகுமாா், செவிலியா்கள், பிற குழுவினரின் ஒருங்கிணைந்த பணியே முக்கிய காரணம் என மருத்துவமனை நிா்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.