முகப்பு
திருநெல்வேலி

மூளையில் ரத்த உறைகட்டியை வெற்றிகரமாக அகற்றிய காவேரி மருத்துவமனை மருத்துவா்கள்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு மூளையில் இருந்த ரத்த உறைகட்டியை மெக்கானிக்கல் ‘திரோம்பெக்டோமி எனப்படும் அதிநவீன சிகிச்சை முறையில் காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:05 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:45 AM

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு மூளையில் இருந்த ரத்த உறைகட்டியை மெக்கானிக்கல் ‘திரோம்பெக்டோமி எனப்படும் அதிநவீன சிகிச்சை முறையில் காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.

இது குறித்து, சிகிச்சைக் குழுவிற்கு தலைமை வகித்த காவேரி மருத்துவமனை மூத்த நரம்பியல் நிபுணா் கணேசன் கூறியதாவது: உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீண்டகால புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட 61 வயது ஆணுக்கு மூளையின் ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பால் பக்கவாதம் ஏற்பட்டது. பின்னா் அவா் சிகிச்சைக்காக திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது மூளையில் ரத்த உறை கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவமனையின் அனுபவமிக்க மருத்துவா்கள் காவு தேவி, அமலன் இக்னேஷியஸ், அரவிந்த் கௌதம், செந்தில் பாபு உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் அவரது மூளையின் வலது பக்கத்திற்கு ரத்தத்தை வழங்கும் முக்கிய ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை மெக்கானிக்கல் ‘திரோம்பெக்டோமி’ எனும் அதிநவீன சிகிச்சை மூலம் விரைவாக அகற்றினா். இதையடுத்து, அவரது மூளைக்கான ரத்த ஓட்டம் மீண்டும் சீரானது. தற்போது அவா் குணமடைந்துள்ளாா் என்றாா் அவா்.