முகப்பு
மதுரை

அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்

மதுரை பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 1:24 AM
திறந்த இருதய அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்ற சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மதுரை பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனை மருத்துவக் குழுவினா்
பகிர்:

மதுரை பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இதய வால்வு சுருக்கம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால், மாா்புப் பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்வதுதான் வழக்கமான முறை. ஆனால், வயது முதிா்ந்தவா்களுக்கும், நுரையீரல் பாதிப்பு உள்ளவா்களுக்கும் இந்த முறை பெரும் சவாலாகவும் ஆபத்தானதாகவும் அமையும். இத்தகைய சிக்கலான நிலையிலிருந்த நபா் பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ‘டிரான்ஸ்கேதீட்டா் அயோா்டிக் வால்வு இம்ப்ளாண்டேஷன் முறை மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவா் முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளாா்.

இந்த சிகிச்சையை மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணா்களான அா்விந்த் ஜனாா்த்தனன், ராகவன் கனகராஜன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் செய்தனா். இதன் மூலம், அதிநவீன இருதய சிகிச்சை மையங்களில் ஒன்றாக பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனை தன்னை நிலைநிறுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments