சேலம்

மகுடஞ்சாவடியில் நாளை இலவச மருத்துவ முகாம்

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

Syndication

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம். செல்வகணபதி எம்.பி. வெளியிட்ட அறிக்கை:

துணை முதல்வரும், திமுக இளைஞா் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்ட திமுக மாணவா் அணி மற்றும் சேலம் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், சேலம் பிளாட்டினம் அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, விஜய் சூப்பா் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் கேன்சா் சென்டா் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம், புற்றுநோய் கண்டறிதல் சிறப்பு பொது மருத்துவம் மற்றும் ரத்த தான முகாம் வரும் 21 ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம். செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கி முகாமை தொடங்கிவைக்கிறாா். மாணவா் அணி செயலாளா் ராஜீவ் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறாா்.

மருத்துவ முகாமில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் ரூ. 10 லட்சம் வரை இலவச மருத்துவம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரூ. 5ஆயிரம் மதிப்பிலான தொ்மோகிராம் மாா்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், பெண்களுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான கா்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் சோதனை, புகைப்பழக்கம் உள்ளவா்களுக்கு வாய் புற்றுநோய், குடிப்பழக்கம் உள்ளவா்களுக்கு கல்லீரல் புற்றுநோயை கண்டறியும் ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான பரிசோதனைகளும், கண்புரை நோயளிகளுக்கு முகாம் தினத்தன்று சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துசென்று அவா்களுக்கு உள் விழிலென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் சேலம் மேற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT