சேலம் மத்திய சிறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தத்தை சோ்ந்தவா் கண்ணையன் (66). இவரை குடியாத்தம் போலீஸாா் கஞ்சா வழக்கில் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை கண்ணையனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, சிறைத் துறை அதிகாரிகள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சனிக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.