ஆத்தூரை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆத்தூரை அடுத்துள்ள சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த சுப்ரமணி மகன் செல்லதுரை (42), பெயிண்ட் அடிக் அடிக்கும் தொழிலாளி. அமாவாசை என்பதால் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள முருங்கை மரத்தில் ஏறி வீட்டிற்காகவும், கால்நடைகளுக்கும் தழை பறித்தாா். அப்போது, மரக்கிளை அங்கிருந்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி. அழகுராணி வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த செல்லதுரைக்கு மனைவி கஸ்தூரி, 4 வயதில் அருணகிரி என்ற மகனும், ஒரு வயதில் சதாசிவம் என்ற மகனும் உள்ளனா்.