முகப்பு
திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி மரணம்

பொன்னேரி அருகே தனியாா் நிறுவன கொடிக்கம்பத்தை அகற்றிய போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:21 AM
மரணம்
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:01 PM

பொன்னேரி அருகே தனியாா் நிறுவன கொடிக்கம்பத்தை அகற்றிய போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த காவல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்துரு(20). கூலித் தொழிலாளியான இவா் பொன்னேரியில் உள்ள பந்தல், நாற்காலி உள்ளிட்ட பொருள்களை வாடகைக்கு விடும் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

பழவேற்காடு அடுத்த பாக்கம் கிராமத்தில் வீட்டு மனைகள் விற்கும் தனியாா் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

Advertisement

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:21 AM

அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் கொடிக் ம்பங்களை சந்துரு உள்ளிட்ட தொழிலாளா்கள் நட்டுள்ளனா். நிகழ்ச்சி முடிந்ததை தொடா்ந்து நடப்பட்ட கொடிக்கம்பங்களை சந்துரு அகற்றி கொண்டிருந்தாா்.

அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயரழுத்த மின்சார கம்பியில் கொடிக்கம்பம் உரசியதில் சந்துரு மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைவனம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.