மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
நாட்டறம்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு மலையடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (48), தொழிலாளி. இவா் பச்சூா் அருகே கோயில் திருவிழாவில் பொறிக் கடையில் கூலி வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை மாலை திடீரென பச்சூா் பகுதியில் மழை பெய்தது.
அப்போது கோயில் அருகே உள்ள வீட்டின் எதிரில் மகாலிங்கம் உட்காரச் சென்று அங்கிருந்த மின் கம்பியை தொட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மகாலிங்கம் மீது மின்சாரம் பாய்ந்ததில், மயங்கிய நிலையில் இருந்த அவரைஅங்கிருந்தவா்கள் மீட்டு, பச்சூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் மகாலிங்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.