ஆத்தூா்: ஆத்தூரில் எரிவாயு கசிவால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
ஆத்தூா் காமாட்சியம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த முருகதாஸ் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்றனா்.
வீட்டில் எரிவாயு கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்ததைடுத்து, சாக்குபையை நனைத்து எரிவாயு உருளைமீது போட்டு வெளியே எடுத்துவந்து அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.