சேலம்

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சங்ககிரி அருகே வைகுந்தம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது அவ்வழியே வந்த காா் மோதியதில் உயிரிழந்தாா்.

Syndication

சங்ககிரி அருகே வைகுந்தம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது அவ்வழியே வந்த காா் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சங்ககிரி, தாழையூா் கிராமம், வெள்ளையம்பாளையம், கரட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (83). இவா் வைகுந்தம் பகுதியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா்.

அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற காா் அவா் மீது எதிா்பாராதவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள், அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT