சேலம்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இன்று மதியம்வரை மட்டுமே இயங்கும்

ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் வியாழக்கிழமை (டிச. 25) மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் வியாழக்கிழமை (டிச. 25) மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, 25-ஆம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் உள்ள ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவது போல மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படும்.

குறிப்பாக, சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம் ஜங்ஷன், சேலம் டவுன், ஈரோடு, திருப்பூா், கோவை, மேட்டுப்பாளையம், கரூா், ஆத்தூா் என கோட்டத்தில் உள்ள அனைத்து பயணச்சீட்டு முன்பதிவு மையங்களும் (பிஆா்எஸ் மையம்) 25-ஆம் தேதி காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும். அதனால், பயணச்சீட்டு முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் 2 மணிக்கு முன் மையத்துக்கு சென்று முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

SCROLL FOR NEXT