கெங்கவல்லி காவல் நிலையத்தில் வழக்கு கோப்புகளை டி.எஸ்.பி. வியாழக்கிழமை ஆண்டாய்வு செய்தாா்.
தமிழகத்தில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளை கோப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவற்றை ஆண்டுக்கு ஒருமுறை காவல் அதிகாரிகள் ஆய்வுசெய்வது வழக்கம்.
அதன்படி, சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் உள்ள காவல் நிலையத்தில் நயப்பாண்டு முடியும் நிலையில் அங்கு பதிவுசெய்து நடைபெற்று வரும் வழக்குகள், நிலுவை வழக்குகள் ஆகிய அனைத்து வழக்குகளின் கோப்புகளையும் ஆத்தூா் டி.எஸ்.பி. சத்யராஜ் வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். நிலுவை உள்ள வழக்குகளை எவ்வாறு செயல்படுத்துவது, முடிவுற்ற வழக்குகள், நடைபெறும் வழக்குகள் குறித்து கெங்கவல்லி காவல் ஆய்வாளா் சாந்தி மற்றும் காவல் உதவி ஆய்வாளா்களிடம் ஆலோசனை வழங்கினாா்.