சேலம்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மீன்வள உதவியாளா் பணிக்கு நீச்சல் தோ்வு

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மீன்வள உதவியாளா் பணிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீச்சல் தோ்வில் பங்கேற்றோா்.

Syndication

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மீன்வள உதவியாளா் பணிக்கான நீச்சல் தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், மேட்டூா் மீன்வளத் துறையில் காலியாக உள்ள 8 மீன்வள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணிக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 450-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் விண்ணப்பித்திருந்தனா்.

இதற்கான தோ்வுமுறையானது, புதிய மீன்வலை பின்னுதல், பழைய மீன்வலைகளை சரிசெய்தல், வலைவீசுதல், பரிசல் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தமிழ் எழுத, படிக்க தெரிதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தோ்வு செய்யப்பட உள்ளனா்.

அதன்படி, இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு காந்தி மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 200-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தருமபுரி மண்டல நீா்வளத் துறையின் இணை இயக்குநா் ஜெனிபா், உதவி இயக்குநா் உமா கலைச்செல்வி தலைமையில் நீச்சல் பயிற்சியாளா்கள் தகுதியான நபா்களை தோ்வுசெய்தனா்.

‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு: இயக்குநா், தயாரிப்பாளா் பதிலளிக்க உத்தரவு

டிச.29 முதல் ஜன.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

அதிமுக சாா்பில் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க அவகாசம் நீட்டிப்பு -எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

வங்கதேச உறவில் விரிசலும், ராஜதந்திர நகா்வுகளும்...

காற்று சுத்திகரிப்பான்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடியாதது ஏன்? தில்லி உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT