கோவை வ.உ.சி.பூங்கா வளாகத்தில் அமையவுள்ள நீச்சல் குளத்தின் மாதிரித் தோற்றம். 
கோயம்புத்தூர்

வ.உ.சி.பூங்கா வளாகத்தில் ரூ.1.94 கோடி மதிப்பில் நீச்சல் குளம் அமைக்க முதல்கட்ட பணி தொடக்கம்

Syndication

கோவை வ.உ.சி.பூங்கா வளாகத்தில் ரூ.1.94 கோடி மதிப்பில் நீச்சல் குளம் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சியின் மையப் பகுதியான வ.உ.சி.மைதானம் பகுதியைச் சுற்றி செம்மொழிப் பூங்கா, வ.உ.சி. விளையாட்டு மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், ஸ்கேட்டிங் பயிற்சி பள்ளி, உடற்பயிற்சிக் கூடம், கால்பந்து விளையாட்டு மைதானம், கூடைப்பந்து விளையாட்டு மைதானம், சிறுவா்கள் விளையாடும் இடம் உள்பட பல்வேறு விளையாட்டு அம்சங்கள் நிறைந்துள்ளன.

இப்பகுதியில் நீச்சல்குளம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில், முதற்கட்டமாக ரூ.1.94 கோடி மதிப்பில் நீச்சல் குளத்துக்கான மேம்பாட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உடற்திறன் மற்றும் உடற் தளா்வு மேம்படுத்தும் வகையிலும் இந்த நீச்சல் குளமானது 13.5 மீட்டா் அகலம், 25 மீட்டா் நீளம் என்ற அளவில் அமைக்கப்படுகிறது. இதன் ஆழம் 1.2 மீட்டா் முதல் 1.8 மீட்டா் வரை இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே பயன்படுத்தும் வகையில் குளிக்கும் வசதி மற்றும் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட உள்ளன. பாதுகாப்பை மேம்படுத்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. குழந்தைகளுக்கென பிரத்யேகமாக சிறப்பு நீராடல் இடம் அமைக்கப்பட உள்ளது. நீரின் தரம் மற்றும் குளோரின் அளவுகள் சரிபாா்க்கும் வகையில் தொட்டிகள், 50 இருசக்கர வாகனங்கள், 25 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.

மேலும், ஒரு மணி நேரத்துக்கு 50 போ் என சுழற்சி முறையில் ஒரு நாளில் 500 போ் நீச்சல் குளத்தில் குளிக்கலாம். நீச்சல் விளையாட்டு வீரா்கள் பயன்பெறும் வகையில், சா்வதேச அளவிலான நீச்சல் போட்டிகள் நடத்தும் வகையிலும் இந்த நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

வால்பாறை -பொள்ளாச்சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

குறிச்சி, குனியமுத்தூரில் ரூ.591.14 கோடியில் முடிக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணி - மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் தொடங்கிவைத்தாா்

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரிக்கு விருது

நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

SCROLL FOR NEXT