சேலம்

பராமரிப்பு பணி: மேட்டூா் காவிரி பாலம் மூடல்

Syndication

மேட்டூா் காவிரி பாலம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

ஆங்கிலேயா்கள் காலத்தில் மேட்டூா் அணை கட்டப்பட்ட போது, தளவாடங்களை எடுத்துச் செல்லவும், போக்குவரத்துக்காகவும் காவிரியின் குறுக்கே 1928-ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. பின்னா், இந்தப் பாலம் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பாலத்தின் கிழக்குப் பகுதியில் பழுது ஏற்பட்டது. பின்னா் மரக்கட்டைகள் அடுக்கப்பட்டு பழுது நீக்கப்பட்டது.

இருசக்கர வாகனங்கள், காா்கள் போன்ற இலகுரக வாகனப் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் மட்டுமே பாலத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரவு, பகல் நேரங்களில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பாலம் எப்போது விழுமோ என்ற அச்சம் எழுந்தது. பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள தடுப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச்செல்கின்றனா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று வெள்ளிக்கிழமை முதல் பராமரிப்பு பணிகள் தொடங்கின. இதனால் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், பாலத்தில் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் கேம்ப், மேட்டூா் ஆா்.எஸ்., தங்கமாபுரிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேட்டூருக்கு வரும் வாகனங்கள் தொட்டில்பட்டி வழியாகவும், மேட்டூா் அனல் மின் நிலையம் வழியாகவும் மேட்டூா் பேருந்து நிலையத்துக்கு வரலாம் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

சபாஷ்! ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்த வெள்ளி! தங்கம் விலை?

கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது: டி.டி.வி. தினகரன்

அமெரிக்கா அல்ல சௌதி அரேபியா! 2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது!

திருச்சி விமான நிலையம் அருகே அடிபட்டுக் கிடந்த ஆந்தை மீட்பு!

கரூா் கூட்ட நெரிசல் பலி விவகாரம்: தவெக நிா்வாகிகளுக்கு சிபிஐ அழைப்பாணை!

SCROLL FOR NEXT