முகப்பு
புதுதில்லி

மெட்ரோ கட்டுமானப் பணிகள்: இன்று முதல் தில்லி லுட்யன்ஸ் பகுதியில் பொதுப் போக்குவரத்து மூடல்

பண்டிட் பந்த் மாா்க்கில் யுகே யுகீன் பாரத் நிலத்தடி மெட்ரோ நிலைய கட்டுமானப் பணிகள் காரணமாக, ஜிஆா்ஜி வட்டம் மற்றும் பிஎம் வட்டம் இடையே பொதுப் போக்குவரத்து பிப்ரவரி 23 முதல் சுமாா் 12 மாதங்களுக்கு மூடப்படும்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 4:30 AM
தில்லி மெட்ரோ வாகன நிறுத்துமிடங்கள் மூடல் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:48 PM

பண்டிட் பந்த் மாா்க்கில் யுகே யுகீன் பாரத் நிலத்தடி மெட்ரோ நிலைய கட்டுமானப் பணிகள் காரணமாக, ஜிஆா்ஜி வட்டம் மற்றும் பிஎம் வட்டம் இடையே பொதுப் போக்குவரத்து பிப்ரவரி 23 முதல் சுமாா் 12 மாதங்களுக்கு மூடப்படும் என்று தில்லி போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

தில்லி மெட்ரோ கட்டுமானப் பணிகளை எளிதாக்குவதற்காக இந்தப் பகுதி மூடப்படும். மேலும், பயணிகள் சிரமத்தைத் தவிா்க்க அதற்கேற்ப தங்கள் பயணங்களைத் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோல் தக் கானாவிலிருந்து பண்டிட் பந்த் மாா்க்கில் வரும் வாகனங்கள் டாக்டா் பிஷம்பா் தாஸ் மாா்க் வழியாக, குருத்வாரா ரகாப்கஞ்ச் சாலை (ஜிஆா்ஜி சாலை) நோக்கிச் சென்று, பின்னா் சா்ச் சாலையை நோக்கி சா்ச் பாதையைப் பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இதேபோல், சா்ச் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜிஆா்ஜி சாலை, தல்கடோரா சாலை மற்றும் பண்டிட் பந்த் மாா்க் நோக்கிச் செல்வதற்கு அந்தப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:21 PM

இந்தப் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, சன்சாத் மாா்க், படேல் சௌக் ரவுண்டானா, அசோகா சாலை, பாபா கரக் சிங் மாா்க், பிஷம்பா் தாஸ் சாலை, குருத்வாரா ரகாப் கஞ்ச் சாலை மற்றும் மகாதேவ் சாலை உள்ளிட்ட மாற்று வழிகளை காவல்துறை பரிந்துரைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியைத் தவிா்ப்பதன் மூலம் இந்த விஷத்தில் பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான மற்றும் சுமூகமான பயணத்தை உறுதிசெய்ய பொதுப் போக்குவரத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐஎஸ்பிடிகள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களை நோக்கி பயணிக்கும் மக்கள், கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு போதுமான நேரத்தைக் கணக்கிட்டு தங்கள் பயணத்தை கவனமாகத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.