சேலம் அய்யன்திருமாளிகை பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த ஆட்சியா் ரா.பிருந்தாதேவி. 
சேலம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

Syndication

சேலம்: சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 8-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை அய்யன்திருமாளிகை பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் இணைந்து, வரும் ஜன. 28-ஆம் தேதிவரை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக 8-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்கின்றன.

இத்திட்டத்தில், சேலம் மாவட்டத்தில் உள்ள 6,11,161 பசுக்கள் மற்றும் 26,420 எருமைகளில் தடுப்பூசி செலுத்த தகுதியான 5,47,638 பசுக்கள் மற்றும் 19,112 எருமைகள் என மொத்தம் 5,66,750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த உள்ளது.

இத்தடுப்பூசி பணி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்ட தேதிகளில் கிராம ஊராட்சி மற்றும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களின் ஒத்துழைப்புடன் உரிய விளம்பரம் மற்றும் முன்னேற்பாடுகள் செய்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில் 150 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாய பெருமக்கள் தங்கள் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்படும் நாளில் தவறாது கால்நடைகளை அழைத்துவந்து இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக, நோய் புலனாய்வுப் பிரிவு நடமாடும் ஆய்வகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் மரு.அர.பிரகாசம், உதவி இயக்குநா்கள் மரு.எம்.செல்வக்குமாா், மரு.எம்.பாலமுருகன் உள்ளிட்ட கால்நடை மருத்துவா்கள், தொடா்புடைய அலுவலா்கள் பங்கேற்றனா்.

மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

SCROLL FOR NEXT