கொளத்தூா் ஒன்றியத்தில் திங்கள்கிழமை இரவு வீடுவீடாகச் சென்று அரசின் நலத்திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோதித்த டி.எம்.செல்வகணபதி எம்.பி. 
சேலம்

பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை தமிழக அரசு அளித்து வருகிறது

இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத பல நல்ல திட்டங்களை பெண்களுக்கு தமிழக அரசு அளித்து வருகிறது

Syndication

மேட்டூா்: இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத பல நல்ல திட்டங்களை பெண்களுக்கு தமிழக அரசு அளித்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி கூறினாா்.

மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் ஒன்றியம், கீரிகாடு கிராமத்தில் திமுகவின் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக வாக்குச்சாவடி முகவா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி பேசியதாவது:

பெண்கள் யாரிடமும் கையேந்தக் கூடாது என்பதற்காக தமிழக முதல்வா் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மாதந்தோறும் 1.30 கோடி மகளிருக்கு ரூ. 1,000 உதவித்தொகை போன்ற பல நல்ல திட்டங்களை தமிழக முதல்வா் அளித்து வருகிறாா். காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பட்டினியுடன் கல்வி கற்கக் கூடாது என்பதற்காக காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா்.

இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தத் திட்டத்தை தமிழக அரசுதான் கொண்டுவந்தது. இதுபோன்ற பல நல்ல திட்டங்களை திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களிடம் கொண்டு சோ்த்து திமுகவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும்.

பாக முகவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள்தோறும் சென்று தமிழக அரசு மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். தமிழக அரசின் திட்டங்களால் பயனடையாத குடும்பங்களே இல்லை என்றாா்.

பின்னா் வீடுவீடாகச் சென்று தமிழக அரசு செய்த சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து திமுக அரசுக்கு ஆதரவு திரட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், கொளத்தூா் ஒன்றிய திமுக செயலாளா் மிதுன்சக்ரவா்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினா் ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

2025 எப்படி இருந்தது? மலைமுகடுகளை அடைந்த இந்திய ரயில்வே!

முதல் பெண் பிரதமர்... 17 ஆண்டு சிறை..கொல்லப்பட்ட பிரதமர் மனைவி.. யார் இந்த கலீதா ஜியா?

பயணியைத் தாக்கிய விவகாரம்: ஏர் இந்தியா விமானி கைது!

கலீதா ஜியா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது? எங்கே?

SCROLL FOR NEXT