தாய் கிழவி வசூல்!
தாய் கிழவி திரைப்படத்தின் வசூல்....
நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
வயதான கம்பீரமான மனவுறுதி கொண்ட பனுவுத்தாயின் (ராதிகா) வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் சொன்னதுடன் பெண் சுதந்திரம் குறித்த பார்வையையும் முன்வைத்த விதத்தில் நல்ல திரைப்படம் என்கிற பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், வார இறுதியில் பல திரைகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடியதுடன் பலரும் இரண்டாம்முறை பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால், இப்படம் மூன்று நாள்களில் உலகம் முழுவதும் ரூ. 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
actor radhika sarathkumar movie thaai kizhavi collected more than 15 crs in just 3 days
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.