முகப்பு
செய்திகள்

கூடுதல் திரைகளில் தாய் கிழவி... முதல் நாள் வசூல் இவ்வளவா?

தாய் கிழவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது...

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:57 PM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:44 PM

நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

வயதான கம்பீரமான மனவுறுதி கொண்ட பனுவுத்தாயின் (ராதிகா) வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் சொன்னதுடன் பெண் சுதந்திரம் குறித்த பார்வையையும் முன்வைத்த விதத்தில் நல்ல திரைப்படம் என்கிற பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Advertisement

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:51 PM

மேலும், ஆன்லைன் வாயிலாக தமிழகம் முழுவதும் பல திரையரங்கங்களில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் வசூலாக ரூ. 2.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பல திரையரங்கங்களும் கூடுதல் காட்சிகளைத் தாய் கிழவிக்கு ஒதுக்கியுள்ளது. இதனால், இப்படம் நல்ல வசூலைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

actor radhika sarathkumar starring movie thaai kizhavi has collected more than 2.5 crores in day one.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.