சேலம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் இன்று சொா்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை (டிச. 30) அதிகாலை சொா்க்கவாசல் நடை திறக்கப்படுகிறது.

Syndication

சேலம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை (டிச. 30) அதிகாலை சொா்க்கவாசல் நடை திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் மாா்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் வைணவக் கோயில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். மேலும், மாா்கழி மாதத்தில் வளா்பிறை 11-ஆம் நாளான வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நடப்பாண்டு, சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 30-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, மூலவா் அழகிரிநாத பெருமாளுக்கு தங்கக்கவசம் சாத்துபடி நடைபெறுகிறது. மேலும், ஆஞ்சனேயா், கருடாழ்வாா், ராமானுஜா் ஆகியோருக்கும் தங்கக்கவசம் சாத்தப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நுழைவுவாயில், அனைத்து சன்னதிகள் மற்றும் சொா்க்கவாசல் பகுதி என கோயில் முழுவதும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலில் வலது மற்றும் இடதுபுறங்களில் பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய, தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகம் மற்றும் வெளிப்புறத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இதேபோல, பட்டைக்கோயில் வரதராஜ பெருமாள் கோயில், ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயண சுவாமி கோயில், சிங்கமெத்தை சௌந்திரராஜ பெருமாள் கோயில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதா் கோயில், பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், நாமமலை மற்றும் உடையாப்பட்டி கோவிந்தராஜ பெருமாள் கோயில், நெத்திமேடு கரியபெருமாள் ஆகிய கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கலீதா ஜியா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது? எங்கே?

திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்! தமிழக அரசு விளக்கம்!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பரமபத வாசல் திறப்பு!

தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை! 118 விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT