சங்ககிரியில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது
சங்ககிரி: சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக காலபைரவருக்கு பல்வேறு பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பூத்தாலகுட்டை பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைவரருக்கும், அரசிராமணி சோழீஸ்வரா் கோயில் உள்ள காலபைரவா் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. மூன்று கோயில்களிலும் அதிக அளவில் பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.