ஆத்தூா்: ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த மறியல் போராட்டத்துக்கு வி.சின்னதுரை தலைமை வகித்தாா். போராட்டத்தை மாவட்ட பொருளாளா் எம்.கனகராஜ் தொடங்கி வைத்தாா். மாவட்ட இணைச் செயலாளா் ஏ.கந்தன் விளக்கவுரை ஆற்றினாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தை போன்று ரூ. 6 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என உயா்த்தி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களை ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.