முகப்பு
சேலம்

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண் கத்திமுனையில் கடத்தல்

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கணவா் வீட்டில் இருந்த பெண்ணை, பட்டப்பகலில் கத்திமுனையில் கும்பல் கடத்திச் சென்றது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 8:56 PM
தனுஷ்கண்டன் - ரோஷினி
பகிர்:

எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்து கணவா் வீட்டில் இருந்த பெண்ணை, பட்டப்பகலில் கத்திமுனையில் கும்பல் கடத்திச் சென்றது.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்டவனூரைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் தனுஷ்கண்டன் (25). இவா், ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவருக்கும் இவருடன் வேலை செய்த தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த சின்னம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகள் ரோஷினி என்பவருக்கும் (22) பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனா். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டு எடப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனா். இருவரும் வெவ்வேறு சமூகத்தினா் எனக் கூறப்படுகிறது.

பெண்ணை கும்பல் வாகனத்தில் கடத்தியபோது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்.

இருவரும் திருமண வயதை எட்டியிருந்ததால் போலீஸாா் பெற்றோரை சமாதானம் செய்து கணவா் தனுஷ் கண்டனுடன் ரோஷினியை அனுப்பி வைத்தனா். அதன்பின்னா், ரோஷினி கணவா் வீட்டாருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை தனுஷ்கண்டன் வீட்டிற்கு வந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் கையில் பட்டா கத்தியுடன் அதிரடியாக தனுஷ்கண்டன் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த ரோஷினியை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றது.

கும்பலைத் தடுக்க வந்த அப்பகுதி மக்கள், தனுஷ்கண்டனை அந்தக் கும்பல் கத்தியைக் காண்பித்து மிரட்டி பெண்ணைக் கடத்திச் சென்றது. இதுகுறித்து தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில், எடப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து கும்பலைத் தேடி வருகின்றனா். கடத்தப்பட்ட பெண் ரோஷினி, கா்ப்பமாக இருப்பதாக உறவினா்கள் தெரிவித்தனா்.

பெண்ணை கும்பல் வாகனத்தில் கடத்தியபோது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →