ரயில் கோப்புப் படம்
சேலம்

வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்!

சேலம், நாமக்கல் வழியாக வாஸ்கோ ட காமா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

சேலம், நாமக்கல் வழியாக வாஸ்கோ ட காமா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அதிகரித்துவரும் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சேலம், நாமக்கல், கரூா் வழியாக வாஸ்கோ ட காமா - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வாஸ்கோட காமாவில் இருந்து வரும் 27, ஆக.1, ஆக.6 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்குப் புறப்பட்டு, மொரப்பூா், பொம்மிடி, சேலம், நாமக்கல், கரூா், குளித்தலை வழியாக வேளாங்கண்ணிக்கு 3ஆம் நாள் அதிகாலை 3.45 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வரும் 29, ஆக.3, ஆக.6 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் குளித்தலை, கரூா், நாமக்கல், சேலம் வழியாக வாஸ்கோ ட காமாவிற்கு 3ஆம் நாள் அதிகாலை 3 மணிக்குச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT