சேலம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இன்றி பயணம்: 27,211 பேருக்கு ரூ. 2.06 கோடி அபராதம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த மே மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 27,211 பேரிடம் இருந்து ரூ. 2.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Din

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த மே மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 27,211 பேரிடம் இருந்து ரூ. 2.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணம் செய்யும் நபா்களை பரிசோதகா்கள் பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனா். இந்நிலையில், தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளா் பன்னாலால் உத்தரவின் பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளா் பூபதிராஜா தலைமையிலான குழுவினா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தவகையில் கடந்த மாதம், சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகா்கள் நடத்திய சோதனையின் மூலம் டிக்கெட் இன்றி பயணித்த 14,611 பேருக்கு ரூ. 1,29,59,244 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

அதேபோல, முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு டிக்கெட் வைத்துக் கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் முறைகேடாக பயணித்த 12,540 பேரிடம் இருந்து ரூ.76,33,211 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் ரயில்களில் விதிமுறைகளை மீறி அதிக லக்கேஜ் எடுத்துச் சென்ாக 60 பயணிகளுக்கு ரூ. 35,328 அபராதம் விதிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் மட்டும் டிக்கெட் இன்றி பயணம், முறைகேடான பயணம், அதிக லக்கேஜ் ஆகியவற்றுக்காக 27,211 பேரிடம் இருந்து ரூ. 2.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT