100 அடிக்குக் குறையாமல் காணப்படும் மேட்டூர் அணை. 
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம்: 230-ஆவது நாளாக 100 அடிக்கும் மேல் நீடிப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி!

230-ஆவது நாளாக 100 அடிக்கும் மேல் நீடிக்கிறது நீர்மட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம்

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 230-ஆவது நாளாக 100 அடிக்கும் மேல் நீடிக்கிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது. அதன் பிறகு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும், தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே குறையாமல் இருந்து வருகிறது.

திங்கள் கிழமை(ஜூன் 9) மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 230-ஆவது நாளாக நூறு அடிக்கும் மேல் நீடிக்கிறது. நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கும் மேல் நீடிப்பதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறித்த நாளான ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலே நீடிப்பதால் அணையில் மீன் வளம் பெருகும் என்று மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT