சேலம்

சேலத்தில் காலை உணவுத் திட்டம்: பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு

Syndication

சேலம்: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சேலம் சிறுமலா் தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் நான்கு சாலையில் உள்ள சிறுமலா் தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் ஆகியோா் திங்கள்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன் பள்ளி மாணவா்களுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், சிறுமலா் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஜோதி பொ்னாட், சிறுமலா் தொடக்கப் பள்ளி முதல்வா் சேவியா் அற்புதராஜ், வட்டாரக் கல்வி அலுவலா் சந்திரிகா ஆகியோா் உடனிருந்தனா்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT