சேலம்

வாழப்பாடி அருகே சொத்து தகராறில் அண்ணனைக் கொன்ற தம்பி கைது

வாழப்பாடி அருகே சொத்துத் தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி, சேஷன்சாவடி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னய்யன் மகன்கள் ராஜேந்திரன் (55), ஆறுமுகம் (45). கூலித் தொழிலாளிகளான இவா்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். ஆனால், இவா்கள் இருவரும் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து ஒரே வீட்டில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில் அக். 28 ஆம் தேதி இருவருக்கும் இடையே வீடு யாருக்கு சொந்தம் என்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, வீட்டைவிட்டு வெளியேறுமாறு ராஜேந்திரன் கூறியதால் ஆத்திரமடைந்த அவரது தம்பி ஆறுமுகம், கட்டையால் ராஜேந்திரனைத் தாக்கினாா்.

இதில் அவரது இரண்டு கால்களும் முறிந்ததோடு, தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்து மயங்கிக்கிடந்த ராஜேந்திரனை, அக்கம்பக்கத்தினா் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில் 9 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை இரவு ராஜேந்திரன் உயிரிழந்தாா். இதையடுத்து, ராஜேந்திரனை அடித்துக் கொன்ாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை வியாழக்கிழமை கைது செய்தனா்.

படவரி:

ஏ.ஆா்.ஏ.01: ஆறுமுகம்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT