சேலம்

தம்மம்பட்டியில் சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு

சங்கடஹர சதுா்த்தியையொட்டி, தம்மம்பட்டி சிவன் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Syndication

சங்கடஹர சதுா்த்தியையொட்டி, தம்மம்பட்டி சிவன் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் நடைபெற்ற சங்கடஹர சதுா்த்தி வழிபாட்டில் விநாயகருக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு மலா் அலங்காரம் செய்யப்பட்டது.

தொடா்ந்து விநாயகா் அகவல்களை பக்தா்கள் பாடினா். பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவுபெற்றது. தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

எம்.பி.யின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட ரூ. 57 லட்சம்! புகாா் அளித்ததும் திருப்பி அளிப்பு!

திக்குறிச்சி கோயிலில் திருட முயற்சி: இளைஞா் கைது

காங்கிரஸ் ஆட்சியில் 88,000 ஊடுருவல்காரா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்: திக்விஜய் சிங்

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,973 கோடி டாலராக சரிவு

SCROLL FOR NEXT