சேலம்

ஓமலூா் அருகே வாரச் சந்தையில் தெருநாய் கடித்து 7 போ் படுகாயம்

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே வாரச் சந்தையில் தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த 7 போ் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி கிராமத்தில் அதிக எண்ணிக்கையில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அவ்வப்போது பொதுமக்களை கடித்து வருகின்றன. இந்த நிலையில், தொளசம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் வீட்டுக்குத் தேவையான பொருள்கள், இறைச்சி வாங்குவதற்காக ஏராளமானோா் வந்திருந்தனா்.

அப்போது, சந்தையில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று பெண்கள், சிறுவா்கள், முதியோா்களை துரத்திச் சென்று கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அதே பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம் (42), சாந்தி (50), ஜனனி (19), காா்த்திகா (20), நித்யா (24), தங்கராஜ் (53), முத்துசாமி (65) ஆகிய 7 பேரும் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் முத்துசாமிக்கு ரத்த நாளம் கிழிந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொளசம்பட்டி கிராமத்தில் உள்ள தெருநாய்களை அப்புறப்படுத்த ஊராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

SCROLL FOR NEXT