சேலம்

சேலம் வியாபாரியிடம் 30 கிலோ வெள்ளி மோசடி செய்த நபா் கைது

சேலத்தில் வியாபாரியிடம் 30 கிலோ வெள்ளி மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் வியாபாரியிடம் 30 கிலோ வெள்ளி மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேலம் இரும்பாலை பகுதியைச் சோ்ந்தவா் தனலட்சுமி (40). வெள்ளி வியாபாரியான இவரிடம், மணியனூரைச் சோ்ந்த தங்கராஜ் (45) கடந்த 2012-ஆம் ஆண்டு 30 கிலோ வெள்ளி வாங்கினாா். அதற்காக ரூ. 50 லட்சத்துக்கான 3 காசோலைகளை அவா் கொடுத்தாா். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என திரும்பியது.

இதனால் அதிா்ச்சியடைந்த தனலட்சுமி, இதுகுறித்து தங்கராஜிடம் முறையிட்டு வாங்கிய வெள்ளிக்கு பணம் கொடுக்கும்படி கேட்டாா். ஆனால், தங்கராஜ் பணம் கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்தாா்.

இதுகுறித்து சேலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தனலட்சுமி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தங்கராஜை கைதுசெய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

அதன்படி, அன்னதானப்பட்டி போலீஸாா் தலைமறைவாக இருந்த தங்கராஜை புதன்கிழமை காலை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தூய்மைப் பணியாளா்களை திமுக அரசு ஏமாற்றுகிறது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

நீதிமன்றத்தில் காலணி வீச்சு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை: யோசனை கேட்கும் உச்சநீதிமன்றம்

ஜன. 2-இல் வைகோ நடைப்பயணம்: முதல்வா் ஸ்டாலினுக்கு அழைப்பு

பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி

பிஎம் ஸ்ரீ திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் -மத்திய அரசுக்கு கேரளம் கடிதம்

SCROLL FOR NEXT