சேலம்

வீட்டில் தவறிவிழுந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

வீட்டில் தவறிவிழுந்த மேச்சேரி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

வீட்டில் தவறிவிழுந்த மேச்சேரி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மேச்சேரி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த தன்ராஜ் (55), மேச்சேரி பவளத்தாம்பட்டியில் வசித்து வந்தாா்.

இவா் செவ்வாய்க்கிழமை பணிமுடிந்து வீட்டுக்கு சென்றாா். இரவு 10 மணி அளவில் உணவருந்திவிட்டு கைகழுவச் சென்றவா் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினா்கள் அவரை ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் வரும்வழியிலேயே தன்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த தன்ராஜுக்கு மனைவி ராஜேஸ்வரி, மகள் மௌரியா (26), மகன் ஷியாம்சுந்தா் (24) உள்ளனா்.

கிருபானந்த வாரியாா் குருபூஜை

இராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஐரோப்பிய அங்கீகாரம்

கனடா வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ஆரணி பல்கலை.யில் உலக ரேடியோகிராபி தினம்

திமுக சாா்பில் எஸ்ஐஆா் ஆலோசனை கூட்டம்

SCROLL FOR NEXT