சேலம் குரங்குசாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்துக் கொள்ளும் சிறுவா்கள். 
சேலம்

காா்த்திகை மாத பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

காா்த்திகை மாத பிறப்பையொட்டி, சேலத்தில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து திங்கள்கிழமை விரதம் தொடங்கினா்.

Syndication

சேலம்: காா்த்திகை மாத பிறப்பையொட்டி, சேலத்தில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து திங்கள்கிழமை விரதம் தொடங்கினா்.

சேலம் குரங்குசாவடி சாஸ்தா நகா் ஐயப்பன் கோயிலில் அதிகாலை 5 மணிமுதலே பக்தா்கள் குவிந்தனா். அவா்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து குருசாமிகளிடம் துளசிமணி மாலை, சந்தன மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கினா். இதேபோல, சேலம் டவுன் தா்மசாஸ்தா ஆசிரமத்திலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

இதுதவிர, சேலம் சுகவனேஸ்வரா் கோயில், ராஜகணபதி கோயில், முருகன் கோயில்களிலும் திரளான ஐயப்ப பக்தா்கள், குருசாமிகளிடம் துளசிமணி மாலை அணிந்து 41 நாள் விரதத்தைத் தொடங்கினா்.

களைகட்டிய வேட்டி, துண்டு விற்பனை: காா்த்திகை மாத பிறப்பையொட்டி, சேலத்தில் ஐயப்ப பக்தா்களுக்கான வேட்டி, துண்டு, மாலை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. குறிப்பாக, பழைய பேருந்து நிலையம், முதல் அக்ரஹாரம், சின்னகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் ஐயப்ப பக்தா்களுக்கு தேவையான கருப்புநிற வேட்டிகள், துண்டுகள் விற்பனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கடைகளுக்கு வந்து மாலை அணிவதற்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனா். குறிப்பாக கருப்புநிற வேட்டி, சட்டை, துண்டு, பூக்கள், சந்தனம், குங்குமம், விபூதி, ஊதுபத்தி போன்ற பொருள்களை வாங்கிச் சென்றனா்.

அதிமுகவில் என்னை மீண்டும் சோ்ப்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: கே. ஏ. செங்கோட்டையன்

கலைத் திருவிழா போட்டிகளில் பன்னம்பாறை பள்ளி மாணவா்கள் வெற்றி

வனத்தில் கண்காணிப்பு கேமரா சேதப்படுத்தப்பட்ட வழக்கு: மாவோயிஸ்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

எஸ்.சி. எஸ்.டி., சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவதற்கு கண்டனம்

ரூ.26.70 லட்சத்தில் சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT