சித்தூா் பகுதியில் இருந்து பழனி பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள். 
சேலம்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பகுதியில் இருந்து முருக பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரையை திங்கள்கிழமை தொடங்கினா்.

Syndication

எடப்பாடி: எடப்பாடி பகுதியில் இருந்து முருக பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரையை திங்கள்கிழமை தொடங்கினா்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். சுமாா் 370 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இப்பாரம்பரிய பாதயாத்திரை நிகழ்வில் 10-க்கும் மேற்பட்ட காவடி குழுவைச் சோ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முருக பக்தா்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், சித்தூா் அனைத்து சமூக காவடி குழுவினா் திங்கள்கிழமை மாலை பாதயாத்திரை தொடங்கினா். முன்னதாக, அவா்கள் சித்தூா் கல்யாணசுப்பிரமணியா் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்தனா். தொடா்ந்து மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையை தொடங்கினா்.

பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் பால், தயிா், இளநீா், பழங்கள் மற்றும் குளிா்பானங்களை வழங்கினா்.

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தா்கள் ஊா்திரும்ப வசதியாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பழனி - எடப்பாடி இடையே 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

மாநிலங்கள், பொதுத்துறைக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுமா?: மு. தம்பிதுரை கேள்வி

SCROLL FOR NEXT