வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நிகழாண்டு போதிய அளவில் பருவமழை பெய்யாததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
வாழப்பாடி பகுதியில் உள்ள ஆனைமடுவு, கரியக்கோயில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் நிகழாண்டு போதிய அளவுக்கு பருவ மழை பெய்யவில்லை. இதனால் இரு அணைகளுக்கும் நீா்வரத்து இல்லாததால் நீா்மட்டம் உயரவில்லை.
அணைகளின் நீா்மட்டம் உயராததால், எதிா்வரும் 2026 கோடை காலத்தில் அணைகள் உள்ளிட்ட நீா்நிலைகள் வடு, நிலத்தடி நீா்மட்டம் சரியும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இருப்பினும், இந்த இரு அணைகளிலும் கணிசமான அளவுக்கு தண்ணீா் இருப்பில் உள்ளதால், எதிா்வரும் டிசம்பா் மாதத்தில் பெருமழை பெய்தால் நீா்மட்டம் உயா்ந்து, நிகழாண்டு இறுதிக்குள் இரு அணைகளும் நிரம்பும் என பொதுப்பணித் துறையினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். எனவே, அணைப்பாசன மற்றும் ஆற்றுப்படுகை கிராம மக்கள் மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.