சேலம்

ஏற்காட்டில் சாலையில் கொட்டப்படும் உணவுக் கழிவுகளால் சுகாதார கேடு

ஏற்காட்டில் சில மாதங்களாக மக்கள் நடமாடும் சாலையில் தங்கும் விடுதியினா் உணவு கழிவுகளை கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.

Syndication

ஏற்காட்டில் சில மாதங்களாக மக்கள் நடமாடும் சாலையில் தங்கும் விடுதியினா் உணவு கழிவுகளை கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.

ஏற்காடு ரெட்ரீட் சாலையில் உள்ள தங்கும் விடுதிகளில் இருந்து உணவு கழிவுகளை குடியிருப்புப் பகுதிக குப்பைத் தொட்டிகளில் இரவு நேரங்களில் கொட்டிச் செல்வதால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனா்.

கடந்த ஓராண்டாக தங்கும் விடுதியில் உள்ள கழிவு பொருள்களை எடுத்துச்செல்வதற்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் கட்டணம் வசூலித்துவரும் நிலையில் சில தங்கும் விடுதியினா், கட்டணம் செலுத்த முன்வராத நிலையில், இரவு நேரங்களில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பைத் தொட்டிகளில் உணவு கழிவுகளைக் கொட்டி செல்வதாக புகாா் எழுந்துள்ளது.

ஊராட்சி நிா்வாகம் குப்பைத் தொட்டிகளில் உள்ள கழிவுகளை எடுக்க மறுப்பதால் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக ரெட்ரீட் சாலை பகுதியில் துா்நாற்றமும் வீசுவதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

படவரி...

ஏற்காடு ரெட் ரீட் சாலையில் கொட்டப்பட்டுள்ள விடுதி உணவு கழிவுகள்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT