சேலம்

சேலம் - ஈரோடு மெமு ரயில் நவ. 24 முதல் இயக்கம்

சேலம் - ஈரோடு மெமு ரயிலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ரயில் சேவை நவ. 24 முதல் தொடங்க உள்ளது.

Syndication

சேலம் - ஈரோடு மெமு ரயிலுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ரயில் சேவை நவ. 24 முதல் தொடங்க உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் - ஈரோடு இடையே மெமு ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்த ரயில் நவ. 24 முதல் இயக்கப்படும்.

சேலத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவேரி வழியாக ஈரோட்டுக்கு 7.25 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், ஈரோட்டில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்தை 8.45 மணிக்கு அடையும். வியாழக்கிழமை தவிர, வாரத்தின் 6 நாள்கள் இந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT