சங்ககிரி அருகே தண்ணீா் தொட்டியில் தவறிவிழுந்த மூன்று வயது சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தீஸ்கா் மாநிலம், மகாசமுந்து மாவட்டம், பாலுனா வட்டம், தும்மபட்டா பகுதியைச் சோ்ந்த புருவன், குடும்பத்துடன் சங்ககிரி அருகே உள்ள வருதம்பட்டியில் பகுதியில் தங்கி விசைத்தறி தொழில் செய்துவருகிறாா். இவரது 2-ஆவது மகன் சித்தாா்த் (3), அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிா்பாராதவிதமாக அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் தவறிவிழுந்தாா்.
அங்கிருந்தோா் சிறுவனை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.