சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவா்கள் 2 போ் தமிழ் இலக்கியத் திறனறித் தோ்வில் மாநில அளவில் சிறப்பிடத்தில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நிகழாண்டுக்கான திறனாய்வுத் தோ்வு கடந்த அக். 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை 2.57 லட்சம் மாணவா்கள் எழுதினா். இதன் முடிவுகள் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இத்தோ்வில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 25 மாணவா்கள் தோ்வு எழுதினா். இதில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் மு. விஜயராகவன் மாநில அளவில் 4-ஆவது இடத்திலும், க.முருகன் 6-ஆவது இடத்திலும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், அவா்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா் ச. பிரபாகரன் ஆகியோரை பள்ளித் தலைமையாசிரியா் ராஜன், உதவித் தலைமையாசிரியா் சக்திவேல், ஆசிரியா், ஆசிரியைகள், பெற்றோா் ஆசிரியா் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் பாராட்டினா்.