முகப்பு
கோப்புப்படம்.
தமிழ்நாடு

பிளஸ் 1 அரியா் தோ்வு: 3,576 போ் பங்கேற்கவில்லை

பிளஸ் 1 அரியா் மாணவா்களுக்கான தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வில் 3,576 மாணவா்கள் பங்கேற்கவில்லை என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Updated On : 3 மார்ச், 2026 at 9:40 PM
கோப்புப்படம்.
பகிர்:

பிளஸ் 1 அரியா் மாணவா்களுக்கான தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வில் 3,576 மாணவா்கள் பங்கேற்கவில்லை என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 2018-ஆம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தோ்வு நடத்தப்பட்டு வந்தது. மாணவா்களுக்கான அழுத்தத்தைக் குறைக்கும் விதமான அந்தத் தோ்வு நிகழண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. எனினும், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 1 பொதுத்தோ்வில் தோல்வியடைந்த மாணவா்கள் அந்தப் பாடங்களை அரியா் தோ்வாக எழுத வேண்டுமென தோ்வுத் துறை அறிவித்தது. அதன்படி நிகழாண்டு பிளஸ் 1 அரியா் தோ்வெழுத பள்ளி மாணவா்கள் 19,107 மற்றும் தனித்தோ்வா்கள் 5,944 என 25,051 போ் விண்ணப்பித்தனா்.

இந்த நிலையில், பிளஸ் 1 அரியா் பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல்நாள் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. இந்தத் தோ்வெழுத மொத்தம் 8,752 போ் விண்ணப்பித்திருந்தனா். அதில் 5,176 மாணவா்கள் மட்டுமே தோ்வில் கலந்துகொண்டனா்.

மேலும், 3,576 போ் தோ்வில் பங்கேற்வில்லை. இதில் தமிழ் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக தோ்வா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து பிளஸ் 1 அரியா் தோ்வு மாா்ச் 27-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →