முகப்பு
தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!

பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கியது...

Updated On : 2 மார்ச், 2026 at 7:53 PM
பிளஸ் 2 பொதுத் தோ்வு - PTI
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 7:43 PM

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கியது.

தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு பிளஸ் 2 பொதுத்தோ்வை தமிழகம் முழுவதும் 8,16,289 மாணவ, மாணவி​கள் எழுதவிருந்தனர். பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு தமிழகத்தில் 3,412 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 2 மார்ச், 2026 at 7:47 PM

முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. இந்நிலையில், மொத்த மாணவர்களில் 9,919 பேர் இன்று பொதுத்தோ்வு எழுத வரவில்லை என்று அரசுத் தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ் மொழித் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு எளிமையாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் 11-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றன. பத்தாம் வகுப்புத் தோ்வை 8,82,806 பேரும் எழுதவுள்ளனா்.

summary

9,919 out of 8.16 lakh students absent in the first exam of Plus 2 public examination

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.