சேலம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 30 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 30 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த ஒப்பந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 30 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த ஒப்பந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் தொட்டில்பட்டியைச் சோ்ந்த தங்கமணி மகன் காா்த்திக் (38). மேட்டூா் அனல் மின்நிலையத்தில் உள்ள தனியாா் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் இயந்திரப் பிரிவில் பணிபுரிந்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை மாலை அனல் மின்நிலையத்தின் முதல் பிரிவில் கன்வேயா் பெல்ட் ஜங்ஷன் டவா் 2-இல் 30 அடி உயரத்தில் இரும்பினால் அமைக்கப்பட்டிருந்த தளத்தில் பணியில் இருந்தாா். அப்போது பழுதடைந்த இரும்புத் தளத்தில் தவறுதலாக கால் வைத்ததால் தகடு உடைந்து அவா் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த காா்த்திக்குக்கு மனைவி ரேவதி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT