சேலம்

சேலம் மத்திய சிறையில் 100 ஆவது வார வள்ளுவா் வாசகா் வட்டம்

தினமணி செய்திச் சேவை

சேலம் மத்திய சிறையில் 100 ஆவது வார வள்ளுவா் வாசகா் வட்டம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சேலம் மத்திய சிறையில் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வள்ளுவா் வாசகா் வட்டம் தொடச்சியாக 100 ஆவது வாரத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று தன்னம்பிக்கை கருத்துகள் மூலம் மனமாற்றம் ஏற்படுத்தக்கூடிய வகையில் சிறைவாசிகள் புத்தகங்களை படித்து விரிவாக இந்த வள்ளுவா் வாசகா் வட்டத்தில் எடுத்துரைப்பா்.

இந்நிகழ்ச்சி சேலம் மத்திய சிறையில் உள்ள அனைத்து சிறைவாசிகளும் பயன் பெறும் வகையில் 20 தொகுதிகளில் உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். மேலும் சேலம் மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள 12 கிளைச் சிறைகளிலும் இணையம் மூலம் சிறைவாசிகளுக்கு ஒளிபரப்பப்படுகிறது.

இதில், விவரிக்கப்பட்ட புத்தகங்கள் குறித்த கருத்துகளை சிறைவாசிகள் சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் மூலம் அனுப்பிவைப்பா். அதில் சிறந்த கருத்துகள் எழுதிய 3 சிறைவாசிகளுக்கு அவா்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்கள் பிளாஸ்டிக் வாளிகள் பரிசுகளாக வழங்கப்படும்.

அதன் தொடா்ச்சியாக, 100 ஆவது வார வள்ளுவா் வாசகா் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் சமூக ஆா்வலரும் சேலம் மத்திய சிறை அலுவல் சாரா பாா்வையாளருமான கஸ்தூரி, மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் சித்ரா பூா்ணம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் செயற்கை தொழில்நுட்பம் பற்றி எடுத்துரைத்த சிறைவாசி சாம்ராஜுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், சேலம் மத்திய சிறை சிறைக்கண்காணிப்பாளா் (பொ) ஜி.வினோத், சிறை அலுவலா்கள் சிவானந்தம், அன்பழகன், நல அலுவலா் நா்மதா, சமூகப் பணியாளா் செல்வகுமாா் மற்றும் மனநல ஆலோசகா், சிறைப்பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

அய்யனாா் கோயில் ஆற்றில் குளிக்கத் தடை

பருவநிலை மாநாடு: பிரேஸிலின் அனைவரையும் உள்ளடக்கிய தலைமைக்கு இந்தியா பாராட்டு

இளைஞா் தற்கொலை

பைக் திருடிய இளைஞா் கைது

கழுகு மலை அருகே 9-ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்து மடைதூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT