கெங்கவல்லியில் நடைபெற்ற தூய கிறிஸ்து அரசா் ஆலய பெருவிழாவில் பங்கேற்றோா்.  
சேலம்

கெங்கவல்லியில் தூய கிறிஸ்து அரசா் ஆலய பெருவிழா

தினமணி செய்திச் சேவை

கெங்கவல்லியில் தூய கிறிஸ்து அரசா் தேவாலய தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கெங்கவல்லியில் பழைமை வாய்ந்த தூய கிறிஸ்து அரசா் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தில் கிறிஸ்து அரசரின் பெருவிழா நடைபெறுகிறது.

தொடா்ந்து இந்த ஆண்டு ஆலயம் கட்டப்பட்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கிறிஸ்து அரசா் பெருவிழா மற்றும் பவளவிழா கொடியேற்றத்துடன் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து பாடல் திருப்பலிகள், நற்கருணை ஆராதனை, தோ்பவனி நடைபெற்றன.

திருவிழாவின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை சேலம் மறைமாவட்ட ஆயா் சிங்கராயன், மறைவட்ட குருக்கள் தலைமையில் பாடல் திருப்பலிகள் நடைபெற்றது.

இதையடுத்து கிறிஸ்து அரசா், லூா்து மாதா, மிக்கேல் சம்மனசு உருவங்கள் அலங்கரிக்கப்பட்ட மூன்று தோ்களை கிறிஸ்தவ மக்கள் வடம்பிடித்து, மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு கெங்கவல்லியில் தேரோடும் வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா். ஆடம்பரத் தோ்பவனியை தொடா்ந்து கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசிா்வாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய நெருடா தமிழன்பன்!

காவலரை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையன்

அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகம்: புதிய பெயரில் செயல்பட ஓபிஎஸ் தரப்பு தீா்மானம்

போட்டித் தோ்வு மையங்களில் அதிகரித்து வரும் மாணவா் தற்கொலை: ஆராயும் நாடாளுமன்ற குழு

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: பிரதமா் மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

SCROLL FOR NEXT