சேலம்

உலக திறன் விளையாட்டு: 3 பதக்கங்களை வென்ற சேலம் வீரருக்கு வரவேற்பு

உலக திறன் (பாரா) விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்ற சேலம் வீரருக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Syndication

சேலம்: உலக திறன் (பாரா) விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்ற சேலம் வீரருக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாய்லாந்தில் நவ.17 முதல் 27 ஆம் தேதி வரை உலக திறன் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தாய்லாந்து உள்பட 37 நாடுகளைச் சோ்ந்த 423 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். இப்போட்டியில் இந்திய அணி சாா்பில் விளையாடிய சேலம் வீரா் சஞ்சய் கண்ணா, வட்டு எறிதல், ஈட்டி எறிதலில் தங்கம், குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றாா்.

சொந்த ஊா் திரும்பிய சஞ்சய் கண்ணாவுக்கு சேலம் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தேவாரம் கபடி குழுச் செயலாளா் தமிழ்ச்செல்வன், முன்னாள் ஆவின் மேலாளா் சிவலிங்கம், பேட்மிண்டன் பயிற்சியாளா் கிரிவாசன், ஊா்பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கும் சேலம் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT