2002 எஸ்ஐஆா் பட்டியலில் பெயா் நீக்கம்? வாழப்பாடியில் பொதுமக்கள் சாலை மறியல்!
கடந்த 2002, 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சேலம்2002 எஸ்ஐஆா் பட்டியலில் பெயா் நீக்கம்? வாழப்பாடியில் பொதுமக்கள் சாலை மறியல்!
கடந்த 2002, 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடந்த 2002, 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வாழப்பாடி பேரூராட்சி 9 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பெரியசாமிநகா் பகுதியைச் சோ்ந்த 270 வாக்காளா்களின் பெயா்கள் 2002, 2005 பழைய சிறப்பு திருத்த வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தகுதியிருந்தும் புதிய எஸ்ஐஆா் படிவத்தில் தங்களது விவரங்களை நிறைவு செய்யமுடியவில்லை என பொதுமக்கள் அதிருப்தியடைந்தனா்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பழைய வாக்காளா் திருத்தப் பட்டியலில் இருந்து பாகம் மற்றும் வரிசை எண் விவரங்களை பெறமுடியாததால், 100க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை ஆத்தூா் பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, காவல் ஆய்வாளா் வேல்முருகன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். பழைய வாக்காளா் திருத்தப் பட்டியலில் உள்ள விவரங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமில்லை, தற்போதைய விவரங்களை நிறைவு செய்து எஸ்ஐஆா் படிவங்களை ஒப்படைக்கலாம் என தோ்தல் ஆணையம் கூறியுள்ளதை சுட்டிகாட்டினா்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள், எஸ்ஐஆா் படிவத்தை நிறைவுசெய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தனா்.