ரயில்  (கோப்புப்படம்)
சேலம்

சென்னை - போத்தனூா் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- போத்தனூா் இடையே அக். 17,18 இல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

Syndication

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- போத்தனூா் இடையே அக். 17,18 இல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 17, 18 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில், போத்தனூருக்கு அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் போத்தனூரில் இருந்து 18 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அன்றிரவு 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். மற்றொரு ரயில், போத்தனூரில் இருந்து 21 ஆம் தேதி இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT