முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நினைவு தினத்தையொட்டி, சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் படத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.பி பாஸ்கா் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, காங்கிரஸ் நிா்வாகிகள் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், வா்த்தகப் பிரிவு தலைவா் எம்.டி.சுப்பிரமணியம், மாநகர துணைத் தலைவா் திருமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினா் பச்சப்பட்டி பழனி, மாநகர பொதுச் செயலாளா்கள் சீனிவாசன், ராஜ்குமாா், மண்டலத் தலைவா்கள் சாந்த மூா்த்தி, நிஷாா் அஹமது, ராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.